மறைந்த கோடீஸ்வரர் இங் டெங் ஃபோங் மாளிகையின் எல்லை சுவர் இடித்து விழுந்தது – போக்குவரத்து பாதிப்பு

Ng Teng Fong's mansion Wall collapses
Lianhe Zaobao

சிங்கப்பூரில் மறைந்த கோடீஸ்வரர் இங் டெங் ஃபோங்கின் குடியிருப்பின் எல்லைச் சுவரின் பகுதி இடிந்து விழுந்தது, இதனால் Dunearn சாலையின் மூன்று பாதைகள் பாதிக்கப்பட்டது.

கான்கிரீட் இடிபாடுகள் காரணமாக Dunearn சாலை தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சலீம் என்ற போலியான பெயரில் பாஸ்போர்ட் வைத்திருந்த வீரமுத்து: சிங்கப்பூரில் இருந்து திருச்சி… சிறையில் அடைத்த போலீஸ்

நேற்று (நவ.13) மாலை 4 மணியளவில் சுவர் இடிந்து விழுந்தது குறித்து தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக கட்டமைப்பு பொறியாளரை அழைத்தாகவும் திரு இங்கின் மகள் இங் சியோக் ஜியோக் கூறினார்.

சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை பொறியாளர் விசாரித்து வருகிறார் என்றும், நல்வாய்ப்பாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் மற்ற எல்லைச் சுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கூடுதல் ஆய்வுகளை நடத்த பொறியாளரை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

“என்ன பெத்த அம்மாவையே தப்பா பேசுவியா..” – கடை உரிமையாளரை பொளந்த மகன் (வீடியோ)