COVID-19 விதிமீறல்: மூன்று நைட் கிளப்களின் உரிமம் ரத்து..அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.!

nightclub operators licences revoked
Pics: Enterprise Singapore & Singapore Tourism Board

COVID-19 கிருமித்தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதற்காக, மூன்று உணவு மற்றும் பான கடைகளாக செயல்படும் நைட் கிளப்களின் உரிமங்களை அதிகாரிகள் முதன்முறையாக ரத்து செய்துள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதற்காக, உணவு மற்றும் பானக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.

இந்தியா, சிங்கப்பூர் இடையே விமான சேவை- ஆகஸ்ட் மாதத்திற்கான அட்டவணையை வெளியிட்டது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’!

Lucky Plaza கடைத்தொகுதியில் உள்ள 3 Kings Pub, Golden Mile Tower-ல் உள்ள DMAX மற்றும் Oriental Plaza கடைத்தொகுதியில் உள்ள Peony Garden Food House / Club Diamond ஆகிய மூன்று நைட் கிளப்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட நைட் கிளப்களை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த இடங்களில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதால், சிங்கப்பூர் உணவு அமைப்பு அவற்றின் உரிமங்களை ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளது.

மேலும், பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை மீறிய காரணத்திற்காக 11 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் 1,000 வெள்ளி முதல் 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, அனுமதிக்கப்பட்ட நபர்களை விட பல்வேறு உணவகங்களில் பெரிய அளவில் கூட்டம் கூடியதற்காக 24 தனிநபர்களுக்கு 300 வெள்ளி அபராதமும், முகக்கவசம் அணிய தவறிய 7 உணவக ஊழியர்களுக்கு 300 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

COVID-19 கட்டுப்பாடுகளை மீறி உபசரிப்பு சேவை: 20 பெண்கள் கைது.!