தென்னாப்பிரிக்காவின் மோசமான கிருமி மாறுபாடு பாதிப்பு சிங்கப்பூரில் இல்லை – சுகாதார அமைச்சர்

Ong Ye Kung / FB

தென்னாப்பிரிக்கா, ஹாங்காங் மற்றும் போட்ஸ்வானாவில் B.1.1.529 எனப்படும் புதிய கோவிட்-19 கிருமி மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட மிக மோசமான மாறுபாடு இது என்று விவரிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக காணொளியில் வாக்குமூலம் அளித்த ஆடவர் கைது

சுகாதார அமைச்சர் ஓங் யே குங் இது தொடர்பான செய்தியை நவ.26ஆம் தேதியன்று முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.

அதில், இந்த மாறுபாடு தொடர்புடைய எந்த பாதிப்பும் சிங்கப்பூரில் இதுவரை இல்லை என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

சுகாதார அமைச்சகம் (MOH) தற்போது மற்ற நாடுகளில் உள்ள சுகாதார அமைச்சகங்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், புதிய மாறுபாட்டின் தரவை மதிப்பீடு செய்வதாவும் கூறியுள்ளது.

போட்ஸ்வானா, ஈஸ்வதினி, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய ஏழு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு சிங்கப்பூர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதிக விமானக் கட்டணங்களால் தமிழர்கள் அவதி: “சிங்கப்பூர் to தமிழ்நாடு நேரடி விமானம் வேண்டும்”