குறிப்பிட்ட 7 இடங்களுக்கு ERP கட்டணங்கள் இல்லை – குறிப்பிட்ட கால நேரத்தில் இலவசமாக பயணிக்கலாம்

குறிப்பிட்ட 7 இடங்களுக்கு ERP கட்டணங்கள் இல்லை - குறிப்பிட்ட கால நேரத்தில் இலவசமாக பயணிக்கலாம்
LTA

No ERP fees at 7 locations: சிங்கப்பூரில் குறிப்பிட்ட 10 இடங்களுக்கான மின்னியல் சாலை கட்டணங்களில் (ERP) S$1 வெள்ளி குறைக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

வரவிருக்கும் டிசம்பர் மாத பள்ளி விடுமுறையின்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் கட்டணங்கள் குறைக்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA ) கூறியுள்ளது.

சிங்கப்பூர் வரும்/செல்லும் பயணிகள் ஏர்போர்ட் மற்றும் சோதனை சாவடிகளில் இந்த ஆடைகளை அணியாதீர்

அதாவது வரும் நவ.20 முதல் டிச.31 வரை அந்த கட்டண குறைப்பு நடப்பில் இருக்கும், அதற்கு பிறகு ஜன.2 முதல் பழைய முறைக்கு கட்டணம் திரும்பும்.

  • நகரத்தை நோக்கி செல்லும் அலெக்ஸாண்ட்ராவிற்கு முன் உள்ள ஆயர் ராஜா விரைவுச்சாலை (AYE)
  • யூனோஸ் இணைப்புக்கு முன் உள்ள வெஸ்ட்பௌன்ட் பான்-தீவு விரைவுச்சாலை (PIE)
  • பான்-தீவு விரைவுச்சாலை (கல்லாங் பாரு & பெண்டிமீரில் ஸ்லிப் ரோடு)

உட்பட குறிப்பிட்ட நேரத்தில் ஏழு இடங்களுக்குள் இலவசமாக நுழையலாம் என சொல்லப்பட்டுள்ளது.

காலை 7.30 மணி முதல் காலை 9.30 மணி வரை இந்த கட்டண குறைப்பு நடப்பில் இருக்கும்.

திருத்தப்பட்ட கட்டணங்களின் முழு பட்டியல்

Screenshot via LTA
Screenshot via LTA
Screenshot via LTA

சிங்கப்பூரில் அதிரடி தள்ளுபடி விற்பனை.. துணிகள், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி