“விசா தேவையில்லை….எங்கள் நாட்டுக்கு வாருங்கள்”- இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்த நாடு!

Photo: Changi Airport

 

இந்தியாவில் இருந்து ஈரான் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பெண்ணுடன் தனியறையில் பிடிபட்ட ஆடவர்.. சலூனில் அந்த மாறி சேவை – பெண் ஊழியர்களும் கைது

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், ஈரான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இனி விசா தேவையில்லை என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை பிப்ரவரி 04- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள் விசா இல்லாமல், ஈரானுக்கு சுற்றுலாச் செல்லலாம். விசா இல்லாமல் சுமார் 15 நாட்கள் ஈரானில் தங்கிச் சுற்றிப் பார்க்கலாம். ஆறு மாதத்திற்குள் பலமுறை ஈரானுக்கு செல்லும் இந்தியர்கள் முறையான விசாவுடன் ஈரானுக்கு செல்ல வேண்டும்.

அதிக சம்பளம் வேண்டும் என்ற மோகம்.. முதலாளியின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்த வெளிநாட்டவர்

அதேபோல், ஈரானில் சுற்றுலா மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். பணி நிமித்தமாகவோ, மற்ற காரணங்களுக்காக ஈரானுக்கு செல்லும் போது விசா கட்டாயம் தேவை என்று ஈரான் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, இலங்கை, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.