கனமான கருவி விழுந்து இரைச்சல் தடுப்பு பேனல் சேதம்.. கட்டுமான ஊழியர்கள் நிலை என்ன?

Noise barrier damaged pasir-ris-cross-island
haiqeljupri2/TikTok

இரைச்சல் தடுப்பு பேனல் சேதமடைந்ததை அடுத்து, பாசிர் ரிஸ் ஈஸ்ட் நிலையத்தின் கட்டுமான தளத்தில் பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்ததை அடுத்து அனைத்தும் பாதுகாப்புடன் இருக்கிறதா என அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

இந்தியருக்கு சிறை, ஆறு பிரம்படிகள்.. சிங்கப்பூரில் இளம் பெண்ணை தூக்கிச்சென்று மானபங்கம் செய்த கொடூரம்

MRT கட்டமைப்பில் வரவிருக்கும் குறுக்கு தீவு பாதையின் ஒரு பகுதியாக இந்த கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த சம்பவத்தில் ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) கூறியுள்ளது.

ஒப்பந்த நிறுவனத்தை வேலையைத் தொடர அனுமதிக்கும் முன், தளம் ஒழுங்காக இருக்கிறதா என்று சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிளாக் 208 பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 21 க்கு அடுத்த தளத்தில், கடந்த ஜனவரி 16 அன்று மாலை 5 மணியளவில் கிராப்பர் கருவி கவிழ்ந்ததாக LTA தெரிவித்தது.

இதனால் அருகிலுள்ள வீடமைப்பு வளர்ச்சி பிளாக்குகளுக்கு எந்த சேதமும் இல்லை என LTA கூறியது.

மீண்டும் சிங்கப்பூர் TOTO “சிறப்பு குலுக்கல்”… பிரத்யேக இணைதளம் – கோடீஸ்வரனாக ஓர் வாய்ப்பு