சிங்கப்பூரில் இருந்து கோவை: கடத்தல் நடவடிக்கை.. பெட்டியை போட்டுவிட்டு எஸ்கேப் – சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணை

NParks investigating alleged smuggling singapore to tamilnadu
Photo: Coimbatore Airport Official Twitter Page

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தின் தொடர்பில் சிங்கப்பூர் பூங்கா வாரியம் (NParks) விசாரணை நடத்தி வருகிறது.

அதாவது கடந்த நவம்பர் 7 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட ஸ்கூட் விமானம் TR540 இல் விலங்குகள் கடத்தப்பட்டது குறித்து தகவல் கிடைத்ததாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்த NParks வனவிலங்கு வர்த்தக இயக்குனர் டாக்டர் அன்னா வோங் கூறினார்.

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையா?

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்குக் கொண்டுவரப்பட்ட கவர்ச்சியான விலங்குகள் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து தங்களுக்கு தெரியும் என்று Scoot நிறுவனம் கூறியது.

இந்நிலையில், இது குறித்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

“சிங்கப்பூரில் அனைத்து விலங்குகளையும் இறக்குமதி செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் NParks வாரியத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்.”

இதில் உயிருள்ள விலங்குகள், விலங்கு பாகங்கள் மற்றும் விலங்கு சார்ந்த பொருட்கள் ஆகியவை அடங்கும்.

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணப்பெட்டிகள் வைக்கும் பகுதியில் உரிமை கோரப்படாமல் விடப்பட்ட மூன்று பயணப்பெட்டிகளை கண்டதாகவும், அதில் விலங்குகளை கண்டுபிடித்ததாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் 10 அன்று கூறினர்.

கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளில் காட்டு சிலந்திகள் மற்றும் ஆப்பிரிக்க ஸ்பர்டு ஆமை மற்றும் மலைப்பாம்புகள் போன்றவை இருந்தன.

இந்நிலையில், இது குறித்து இந்திய வனவிலங்கு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம்