சிங்கப்பூரில், பறவைக்கு உணவளித்த ஆடவர் – NParks விசாரணை!

NParks investigating feeding bird
NParks investigating incident of man feeding hornbills banana at Loyang (PHOTO: Joseph Choo / FB)

லோயாங் தொழில்துறை பேட்டையில், காபி ஷாப் மேஜை ஒன்றில் இரண்டு ஹார்ன்பில்ஸ் பறவைக்கு ஒருவர் உணவு வழங்குவதை காணொளி மூலம் நீங்கள் பார்த்திருக்கலாம்.

பறவைகளுக்கு உணவளிக்கும் செயல் ஒரு அனுதாபம் மற்றும் மனதைக் ஈர்க்கும் செயலாக தோன்றினாலும், இதுபோன்று உணவளிப்பது அவைகளுக்கு பல்வேறு வழிகளில் தீங்கு விளைவிக்கும்.

COVID-19 தடுப்பூசி மருந்துக்காக தனது விமானத்தை தயார் செய்யும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, தேசிய பூங்காக்கள் வாரியம் (NParks) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக வாரியம் தெரிவித்துள்ளது.

வன உயிரினங்கள் சட்டத்தின் கீழ், பறவைகளுக்கு முதல் தடவை உணவளிக்கும் குற்றவாளிகளுக்கு S$5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுவோருக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

வன உயிரினங்கள் நிர்வாகத்தின் NParks இயக்குனர் ஹவ் சூன் பெங், வன உயிரினங்களுக்கு உணவளிப்பது தீவிரமான பார்க்கப்படும் என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, கார் மோதல் – 22 பேர் மருத்துவமனையில்..

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…