COVID-19 தடுப்பூசி மருந்துக்காக தனது விமானத்தை தயார் செய்யும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

economy-premium-economy-class-passengers wi-fi
(PHOTO: Reuters)

COVID-19 தடுப்பூசிகள் கிடைக்கும்போது அவற்றைக் கொண்டுவருவதற்கான முன்னுரிமையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பயன்படும் வகையில் ஏழு Boeing 47-400 சரக்குக் விமானங்களை SIA தயாராக வைக்கும் என்று ஊடக அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, கார் மோதல் – 22 பேர் மருத்துவமனையில்..

SIA தனது விமானங்களில் சரக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்யும், மேலும் முக்கிய தடுப்பூசிக்கான வர்த்தக பாதைகளில் ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Pfizer-BioNTech என்ற அந்த மருந்துக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அது தொடர்பான தகவலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில், SIA கார்கோ சுமார் 22,000 டன் மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்தாக விமான நிறுவனம் குறிப்பிட்டு காட்டியுள்ளது.

கடை முன்னே ஒன்றுகூடிய பொதுமக்கள்.. கடையை தற்காலிகமாக மூட உத்தரவு!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…