சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அன்பளிப்புப் பைகளை வழங்கும் NTU தமிழ் இலக்கிய மன்றம்..!

NTU TLS will be donating care packages to Migrant Workers
NTU TLS will be donating care packages to Migrant Workers (Photo : facebook/NTU Tamil Literary Society)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, 10 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் NTU தமிழ் இலக்கிய மன்றம் (NTU TLS) அன்பளிப்புப் பைகளை வழங்க உள்ளது.

ஒரு அன்பளிப்புப் பையின் செலவு $10 என்று NTU TLS குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு பை-க்கும் கிடைக்கும் நன்கொடைக்கு இணையாக $5 வெள்ளியை NTU TLS வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்பு – வேலையின்மை கடந்த பத்தாண்டு காணாத அளவு உயர்வு ..!

இந்த 10ஆம் ஆண்டு நிறைவை பெரியளவில் கொண்டாட NTU TLS திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த கிருமிப்பரவல் காரணமாக அவற்றை மேற்கொள்ள முடியாமல் போனதாக சங்கத்தின் பொதுநல இயக்குநர் (Welfare Director) ஃபாரிஸ் கூறினார் என்று “செய்தி” குறிப்பிட்டுள்ளது.

அன்பளிப்புப் பை உள்ளடக்கிய பொருட்கள்:
  • நோட்புக்
  • பேனா
  • வாசனை பொருள்
  • கோடாரி தைலம்
  • பல் துலக்கும் பிரெஸ்
  • துண்டு
  • லக்ஸ் body wash
  • கோல்கேட் பற்பசை
  • இந்திய நொறுக்கு தீனி

In lieu of our 10th year anniversary, NTU TLS will be donating care packages to Migrant Workers in Singapore.One care…

Posted by NTU Tamil Literary Society on Monday, July 27, 2020

இதில் நீங்கள் நன்கொடை அளிக்கலாம், மேலும் Paynow அல்லது PayLah செய்யலாம் (Faris @ 97578535) என்று NTU TLS தெரிவித்துள்ளது.

நினைவில் கொள்க : பரிமாற்றம் செய்யும் போது உங்கள் பெயரை recipient box -ல் சேர்க்க வேண்டும் அல்லது நீங்கள் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பலாம் (@ 97578535) என்றும் NTU TLS தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 95 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் கிருமித்தொற்று முற்றிலும் இல்லாத இடமாக அறிவிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg