சிங்கப்பூரில் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு அதிகரிப்பு – வேலையின்மை கடந்த பத்தாண்டு காணாத அளவு உயர்வு ..!

Singapore sees worst-ever quarterly fall in employment in Q2 as retrenchments double: MOM
Singapore sees worst-ever quarterly fall in employment in Q2 as retrenchments double: MOM (Photo: REUTERS)

சிங்கப்பூரின் வேலையின்மை விகிதம் இந்த இரண்டாவது காலாண்டில், கடந்த பத்தாண்டு காணாத அளவு உயர்ந்துள்ளது. அதாவது இந்த விகிதம் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.9% உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோய் காரணமாக சேவைகள் மற்றும் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு பின்னடைவை சந்தித்தது.

இதையும் படிங்க : SingPass வைத்திருப்பவர்கள் ஒரு செல்பீ மூலம் DBS டிஜிட்டல் வங்கி சேவைகளை பெறலாம்..!

ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் முதல் காலாண்டில் 2.4 சதவீதம் இருந்தது. மேலும் முந்தைய காலாண்டில் 3,220ஆக இருந்த ஆட்குறைப்பு, ​​ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 6,700ஆக அதிகரித்துள்ளது.

மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிட்ட முதற்கட்ட தகவல்களின்படி, வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களைத் தவிர, இங்குள்ள ஊழியர்களின் எண்ணிக்கை இரண்டாவது காலாண்டில் 121,800ஆக குறைந்துள்ளது.

முதல் காலாண்டின் சரிவை விட இது நான்கு மடங்கு அதிகமாகும், மேலும் இந்த ஆண்டின் முதல் பாதியில் ஊழியர்களின் எண்ணிக்கை 147,500ஆக சரிவை சந்தித்துள்ளது.

சிங்கப்பூரில் 50,000க்கும் மேற்பட்ட COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இதில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அதிகமான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலா தளங்களுக்கு வருகையாளர்கள் தடை, இது சுற்றுலாத் துறையில் பெரிய அளவிலான ஆட்குறைப்புக்கு வழிவகுக்கிறது. மேலும் இரண்டாம் காலாண்டில் சில்லறை மற்றும் உணவக வர்த்தகங்கள் மூடப்பட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு சிறப்பு விமானம் மூலம் சுமார் 177 பேர் சென்றனர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg