மூத்தவர்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான ‘NTUC FairPrice’ தள்ளுபடி திட்டங்கள் நீட்டிப்பு!

Photo: NTUC FairPrice

சிங்கப்பூரில் மிக பிரபலமான சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்று ‘NTUC FairPrice’. இந்த சூப்பர் மார்க்கெட்டுகளில் காய்கறி, மளிகைப் பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் உள்ளன. இதனால், ‘NTUC FairPrice’ சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியையும் அறிவித்து வருகிறது.

துவாஸ் சவுத் பகுதியில் திடீர் தீ விபத்து!

இந்த நிலையில் ‘NTUC FairPrice’ சூப்பர் மார்க்கெட் இன்று (28/12/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மூத்தவர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கான தள்ளுபடி திட்டங்கள் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்தாண்டு (2022) டிசம்பர் 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரத்யேக திட்டங்களின் நீட்டிப்புகள் மூத்தவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 11 மில்லியன் சிங்கப்பூர் டாலர் வரை சேமிக்க உதவும் என்று கணித்துள்ளது NTUC FairPrice’.

“அனைத்து பயணிகளுக்கும் இலவச ‘in-flight’ வைஃபை”- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

முன்னோடித் தலைமுறை (Pioneer Generation- ‘PG’) மற்றும் மெர்டேகா தலைமுறை (Merdeka Generation- ‘MG’) மற்றும் நீல சமூக சுகாதார உதவித் திட்டம் கார்டுதாரர்கள் (Blue Community Health Assist Scheme Card holders) ஆகியோர் தள்ளுபடி பெற தகுதியுடையவர்கள் ஆவர். அவர்கள் குறிப்பிட்ட நாட்களில் அனைத்து நியாய விலை நிறுவனங்களிலும் (All Fairprice Establishments), யூனிட்டி மருந்தகங்கள் (Unity Pharmacies) மற்றும் கிடங்கு கிளப் (Warehouse Club) ஆகியவற்றிலும் தள்ளுபடியை பெற முடியும்.

தகுதியுடையவர்கள், அரசு வழங்கிய MG, PG அல்லது நீல சமூக சுகாதார உதவித் திட்ட கார்டை காசாளர் அல்லது சுய-செக் அவுட் கவுண்டரில் (Self- checkout counter) தங்கள் தள்ளுபடி நாட்களில் கார்டிங் செய்யும் போது சமர்ப்பிக்கலாம். நாளொன்றுக்கு 200 சிங்கப்பூர் டாலர் வரை வாங்கும் போது தள்ளுபடிகள் செல்லுபடியாகும்.

குடியிருப்பில் பல நாட்களாக வீசிய துர்நாற்றம்: அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

அதேபோல், பிஜி ப்ராக்ஸி (PG Proxy) அடுத்தாண்டு ஜூன் மாதம் 30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று ‘NTUC FairPrice’ தெரிவித்துள்ளது. பிஜி ப்ராக்ஸி தனிநபர்கள் தங்கள் குடும்பங்களில் உள்ள முன்னோடிகளின் சார்பாக மளிகைப் பொருட்களை வாங்க அனுமதிக்கிறது.

இதேபோல், இந்த நபர்கள் திங்கள்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் தள்ளுபடிகளைப் பெற தங்கள் குடும்ப உறுப்பினரின் PG கார்டுகளை காசாளர் அல்லது சுய-செக்அவுட் கவுண்டரில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.