சிங்கப்பூரில் தேவை அதிகரிப்பை பூர்த்தி செய்ய 3 விதமான COVID-19 சோதனைக் கருவிகள்..!

NUS researchers develop 3 new COVID-19 swabs to address shortage
NUS researchers develop 3 new COVID-19 swabs to address shortage (Photo: NUS)

உலகளவிலும், சிங்கப்பூரில் தேவை அதிகரிப்பதை பூர்த்தி செய்ய மூன்று விதமான COVID-19 சோதனைக் கருவிகளை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

COVID-19 தொற்று கண்டறிவதில் Nasopharyngeal ஒரு முக்கிய சோதனை ஆகும், ஆனால் பெரும்பாலும் விநியோகச் சங்கிலி இடையூறுகள் காரணமாக அவை கையிருப்பில் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து 12 வெளிநாட்டினர் நாடு கடத்தல் – மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை..!

மூன்று விதமான COVID-19 சோதனைக் கருவிகளுக்கும் Python, IM2, IM3 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் Python, இரண்டு மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்ட புதிய கருவியாகும், இது திரவத்தை நன்கு உறிஞ்சக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இது சோதனையில் உட்படுத்தும்போது, யாருக்கும் பெரிய சிரமத்தை ஏற்படுத்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள சோதனை முடிவுகளுக்கும், இந்த Python மூலம் மேற்கொள்ளப்படும் முடிவுகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றும் ஆய்வுக்குழு சுட்டி காட்டியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் தமிழக ஊழியர்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg