சிங்கப்பூரில் இருந்து 12 வெளிநாட்டினர் நாடு கடத்தல் – மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை..!

12 people deported, barred from re-entering Singapore after flouting COVID-19 circuit breaker rules
12 people deported, barred from re-entering Singapore after flouting COVID-19 circuit breaker rules

சர்க்யூட் பிரேக்கர் அதிரடி நடவடிக்கை காலத்தில் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்காததால் பிடிபட்ட 12 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டு மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட அவர்கள் 20 முதல் 37 வயதுக்குட்பட்ட 9 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என்று சிங்கப்பூர் காவல்படை (SPF) மற்றும் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) திங்களன்று (ஜூலை 13) கூட்டு செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள்..!

இந்த விதிமீறலில் பிடிபட்டு வெளியேற்றப்பட்டவர்கள் இந்தியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மலேசிய நாட்டை சேர்ந்த 23 வயதான அர்வினிஷ் ராமகிருஷ்ணன், சீனாவைச் சேர்ந்த 37 வயதான செங் ஃபெங்சோ (Cheng Fengzhao) என்ற பெண், இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் 10 பேர் இதில் அவரவர் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்திய மாணவர்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டு, அவர்கள் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலைக்கு இடையில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர் மற்றும் எதிர்காலத்தில் சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் தமிழக ஊழியர்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg