சிங்கப்பூரில் மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள்..!

Cinemas reopened from Jul 13
Cinemas reopened from Jul 13 (Shutterstock/Fer Gregory)

சிங்கப்பூரில் உள்ள திரையரங்குகள் இன்று (ஜூலை 13) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

COVID-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், சிங்கப்பூர் தழுவிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த மார்ச் 26 முதல் திரையரங்குகள் மூடப்பட்டன.

இதையும் படிங்க : அங் மோ கியோ குடியிருப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்க தொகுதி உலா மேற்கொண்ட பிரதமர் திரு. லீ..!

மூன்று மாதங்களுக்கு பிறகு, தற்போது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

ஒவ்வொரு திரையரங்குகளிலும் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் காரணமாக 50 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது.

நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் ஐந்து பேர் வரை 1மீ பாதுகாப்பு இடைவெளி இல்லாமல் திரையரங்குகளில் ஒன்றாக அமரலாம் என்று தொடர்புதகவல் ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) தெரிவித்துள்ளது.

இருப்பினும், மற்ற நபர்கள் 1 மீட்டர் பாதுகாப்பான இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று IMDA கூறியுள்ளது.

திரையரங்குகளில், உணவு மற்றும் பானங்களை உட்கொள்ளும் போது தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் தமிழக ஊழியர்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg