மூதாட்டியைத் தள்ளிவிட்டப் பணிப்பெண்ணுக்கு சிறை!

6-bangladeshi-nationals-arrested-for-gang-robbery-
(Photo: TODAY)

 

மியான்மர் (Myanmar) நாட்டைச் சேர்ந்தவர் கியூ கியூ அய் (Kyu Kyu Aye). இவருக்கு வயது 41. இவர் ஆறு ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள உட்லேண்ட்ஸில் (Woodlands) ஒரு வீட்டில் பணிபுரிந்து வந்தார். வீட்டு வேலையைச் செய்வது, மூதாட்டியைக் கவனித்துக் கொள்வது ஆகிய பொறுப்புகள் அந்த பணிப்பெண்ணுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28- ஆம் தேதி அன்று மூதாட்டி தனது வீட்டில் உள்ள சமையலறைக்கு மெதுவாக நடந்து சென்றிருக்கிறார். அப்போது, பணிப்பெண் கியூ கியூ அய், மூதாட்டியை (85 வயது) வேகமாக நடக்க சொல்லியிருக்கிறார். சில முறை மூதாட்டியை இழுத்து விரைந்து செல்ல முயன்றார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த பணிப்பெண் மூதாட்டியைத் தள்ளிவிட்டார். இது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது.

எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி எதிர்பார்த்ததை விட உயர்வு!

இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29- ஆம் தேதி அன்று மூதாட்டி கூ டெக் புவாட் மருத்துவமனையில் (Khoo Teck Puat Hospital) அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், மூதாட்டிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர், மூதாட்டி குணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் 28- ஆம் தேதி அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த வழக்கு மாவட்ட நீதிபதி சேய் யுவன் ஃபாட் (District Judge Chay Yuen Fatt) முன் நேற்று (17/08/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, மூதாட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணிப்பெண்ணுக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதன் தொடர்ச்சியாக பணிப்பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வறுமையில் வாடும் அந்த பணிப்பெண்ணின் குடும்பத்திற்கு ஒரே வருமானம் இவர் வருமானம் மட்டுமே. இதனால் குறைந்தபட்ச தண்டனை” வழங்குமாறு கோரினார்.

இலவச முகக்கவசங்கள் விநியோகம் ஆக. 26- ஆம் தேதி தொடங்குகிறது!

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி சேய் யுவன் ஃபாட், “பணிப்பெண்ணின் செயலின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிட மாட்டேன். இது துரதிர்ஷ்டவசமானது அல்ல; இது ஒரு மோசமான செயல். பாதிக்கப்படக்கூடிய மற்றும் மிகவும் வயதான பெண்ணை பணிப்பெண் தள்ளியுள்ளார். இதனால் மூதாட்டியின் உடலில் எலும்பு உடைந்துள்ளது. அந்த வயதில் ஒரு நபருக்கு எந்தவொரு எலும்பு முறிவும் தீவிரமானது” எனக் கூறி, பணிப்பெண் கியூ கியூ அய்- க்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, பணிப்பெண் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, வழக்கு விசாரணையின் போது பணிப்பெண் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.