தடுப்பூசிப் போடாத 86 வயது மூதாட்டி கொரோனாவால் உயிரிழப்பு!

Photo: Facebook / Changi General Hospital

 

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசிப் போடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது சுகாதாரத்துறை அமைச்சகம். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ள போதிலும் பொதுமக்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூர் தலைவர்களுடன் அமெரிக்க துணை அதிபர் சந்திப்பு.!

இந்த நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி உடல்நலக்குறைவால், கடந்த ஜூலை மாதம் 23- ஆம் தேதி அன்று சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஜூலை மாதம் 29- ஆம் தேதி அன்று அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என உறுதிச் செய்யப்பட்டது.

பின்னர், ஆகஸ்ட் 2- ஆம் தேதி அன்று மூதாட்டிக்கு மீண்டும் கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவருக்கு கொரோனாவுக்குக்கான சிகிச்சையை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் திடீர் வெள்ளம்: இந்த பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் – PUB எச்சரிக்கை.!

மூதாட்டிக்கு புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகள் இருந்ததாகவும், பின்னர், நோய்த்தொற்றுக்கு ஆளானவருடன் தொடர்புடையவர் என்று அந்த மூதாட்டி அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் உயிரிழந்ததால், சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் சுமார் 13 பேர் உயிரிழந்தனர்.