சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் 17 பேர், வெளிநாட்டில் இருந்து வந்த 65 பேருக்கு “Omicron”

Omicron cases Singapore
Andrew Koay

சிங்கப்பூரில் டிசம்பர் 24ஆம் தேதி மதியம் நிலவரப்படி, 82 புதிய ஓமிக்ரான் பாதிப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவற்றில் 17 பாதிப்புகள் உள்ளூர் அளவிலும் மற்றும் 65 பாதிப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்தவை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய கணவரின் வீட்டிற்கு சென்ற மனைவி மர்மமான முறையில் மரணம் – போராட்டத்தில் உறவினர்கள்

இனி, கோவிட்-19 S-gene target failure (SGTF) உறுதி செய்யப்படும் நபர்கள், கூடுதல் whole genome sequencing (WGS) முறை இல்லாமல், Omicron பாதிப்புகளாக வகைப்படுத்தப்படுவர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

உள்ளூர் அனுபவத்தின் அடிப்படையில், ஒரு நபர் SGTF அடையாளம் காணப்பட்டால், அது Omicron மாறுபாடாக இருக்கலாம் எனவும் அது கூறியது.

இது மற்ற நாடுகளில் உள்ள நடைமுறைக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டுள்ளது என்றும் MOH தெரிவித்தது.

இந்த மாற்றத்தின் காரணமாக, WGS நிலுவையில் உள்ள மாதிரிகள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதால், Omicron பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

பெயர், புகைப்படம் இல்லாமல் 2 ஆண்டுகளாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவி செய்யும் இளைஞர்!