‘ஒமிக்ரான்’ பரிசோதனையை அதிகப்படுத்த சென்னை உள்பட 4 விமான நிலையங்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவு!

Singapore Trichy Flight gold

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் ‘ஒமிக்ரான்’ பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

“குழந்தைகளை பிரிந்து வாடும் வெளிநாட்டு ஊழியர்கள்” – நானும் குழந்தை தான்.. அவர்களுக்கு பதில் அன்பளிப்பு வழங்குகிறேன்!

இது தொடர்பாக, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், நேற்று (25/12/2021) சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட நான்கு விமான நிலையங்களின் இயக்குநர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “அபாயம் இல்லாத நாடுகளில் (Not At Risk Countries) இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் ‘ஒமிக்ரான்’ பரிசோதனையை 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். அபாயம் இல்லாத நாடுகளில் ((Not At Risk Countries) இருந்து வருபவர்களையும் 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்த வேண்டும். அபாயம் உள்ள நாடுகளில் (At Risk Countries) இருந்து வந்த 6 பேருக்கும். அபாயம் இல்லாத நாடுகளில் இருந்து வந்த 25 பேருக்கும் ‘ஒமிக்ரான்’ வகை கொரோனா உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

2021 உலகச் சாம்பியன்ஸ்: சிங்கப்பூர் முழுவதும் வலம் வந்த சாதனை வீரர்கள் – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

அபாயம் உள்ள நாடுகள் (At Risk Countries) உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 74 பேருக்கு எஸ் வகை மரபணு வீழ்ச்சிக் கண்டறியப்பட்டுள்ளது. அபாயம் இல்லாத நாடுகளில் இருந்து வருபவர்களும் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவதால், விமான நிலைய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச வருகைப் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் இன்று (26/12/2021) முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.