சிங்கப்பூரில் சென்ற மாதம் வரை 140 பேரின் வேலை அனுமதி ரத்து; 6,600க்கும் மேற்பட்ட அபராதங்கள் விதிப்பு..!

Over 6,600 fines issued for flouting Covid-19 rules
Over 6,600 fines issued for flouting Covid-19 rules (Photo: LTA)

சிங்கப்பூரில் பாதுகாப்பு விதிகளை மீறியவர்களுக்கு, 6,600க்கும் மேற்பட்ட அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள அமைச்சகம் (MEWR) தெரிவித்துள்ளது.

COVID-19 தொற்றிலிருந்து சிங்கப்பூரில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் விதிகளை மீறியவர்களுக்கு இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சமூக அளவில் புதிதாக 18 பேர், வெளிநாட்டில் இருந்து வந்தவர் 7 பேர் பாதிப்பு..!

கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, அதனை சமாளிக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 1 முதல் 29 வரை, சுமார் 3,460,000 அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் சுமார் 89,000-க்கும் மேற்பட்ட வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பை வழங்கியுள்ளது.

ஜூன் 25 ஆம் தேதி வரை, முகக்கவசம் அணிவது தொடர்பான குற்றங்களுக்கு 1,100க்கும் மேற்பட்ட அபராதங்களும், பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளை மீறியதற்காக 5,500க்கும் மேற்பட்ட அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மே 1 முதல் ஜூன் 25 வரை, சர்க்யூட் பிரேக்கர் எனும் அதிரடி நடவடிக்கைகள், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவுகள் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவுகளை மீறியதற்காக 140 பேரின் வேலை அனுமதிகளை ரத்து செய்துள்ளதாகவும் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வேலை வாய்ப்புகளை உருவாக்குவது கடுமையான சவால் – பிரித்தம் சிங்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg