‘பங்குனி உத்திர திருவிழா 2024’- பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் நிர்வாகம்!

Photo: Holy Tree Sri Balasubramaniar Temple Official Facebook Page

 

‘பங்குனி உத்திர திருவிழா 2024’ (Panguni Uthiram Festival 2024) வரும் மார்ச் 25- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 42.69 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்க பேஸ்ட் பறிமுதல்!

சிங்கப்பூரில் உள்ள யிஷுன் இண்டஸ்ட்ரீயல் பார்க்கில் (Yishun Industrial Park A) அமைந்துள்ளது புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் (Holy Tree Sri Balasubramaniar Temple). பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் மார்ச் 25- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று ‘பங்குனி உத்திர திருவிழா 2024’ கொண்டாடப்படவுள்ள நிலையில், பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில், காவடி மற்றும் பால் குடம் எடுக்கும் பக்தர்கள் அதற்கான டிக்கெட்டுகளை கோயில் அலுவலகத்தில் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதற்கான டிக்கெட் விற்பனை வரும் மார்ச் 03- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி, மார்ச் 15- ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.

“சிங்கப்பூர் உட்பட 12 வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும்” என அறிவிப்பு!

வாரத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 07.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை பக்தர்கள் கோயிலுக்கு வந்து காவடி மற்றும் பால்குடத்திற்கான டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். சனிக்கிழமை டிக்கெட் விற்பனை கிடையாது; ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும், இரவு 07.30 மணி முதல் இரவு 09.00 மணி வரையும் டிக்கெட் விற்பனை நடைபெறும்.

Photo: Holy Tree Sri Balasubramaniar Temple Offical Facebook Page

டிக்கெட் வாங்கியவர்கள் மட்டுமே பால் குடம், காவடிகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படுவர். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே காவடி, காவடி தேர் இழுத்தல் போன்ற நேர்த்திக் கடனை செலுத்த அனுமதிக்கப்படுவர். டிக்கெட் வாங்கியவர்கள் திருப்பி கொடுத்தால் பணம் திருப்பித் தரப்பட மாட்டாது.

போலியான S$10,000 நோட்டை விற்க முயன்ற ஆடவர் – விசாரித்து வரும் போலீஸ்

காவடி கொண்டு ஊர்வலமாக வரும் பக்தர்கள் தவில், தோளக், மிருதங்கம், கோல், நாதஸ்வரம் ஆகிய வாத்தியங்களை பயன்படுத்தலாம்; இவை தவிர மற்ற வாத்தியங்களை பக்தர்கள் பயன்படுத்தக் கூடாது. சுயமாகத் தயாரிக்கப்படும் பால் குடத்திற்கு 20 வெள்ளியும், கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் பால் குடத்திற்கு 25 வெள்ளியும், பால் காவடிக்கு 50 வெள்ளியும், இடும்பன் காவடிக்கு 50 வெள்ளியும், தேர் காவடிக்கு 200 வெள்ளியும், காலையில் செயின் காவடி எடுத்தால் 150 வெள்ளியும், மாலையில் செயின் காவடி எடுத்தால் 200 வெள்ளியும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு
புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.