‘பங்குனி உத்திர திருவிழா 2024’: காவடிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன…புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

Photo: Holy Tree Sri Balasubramaniar Temple Official Facebook Page

 

பங்குனி உத்திர திருவிழாவிற்கான காவடிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லிட்டில் இந்தியாவில் ஊழியர் செய்த உதவி.. சர்ப்ரைஸ் கொடுத்த வெளிநாட்டு பெண்

சிங்கப்பூரில் யிஷுன் இண்டஸ்ட்ரீல் பார்க் ஏ- வில் (10 Yishun Industrial Park A) அமைந்துள்ளது புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் (Holy Tree Sri Balasubramaniar Temple). பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

அந்த வகையில், வரும் மார்ச் 25- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று பங்குனி உத்திர திருவிழா- 2024′ புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பங்குனி உத்திர தினத்தன்று பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகளை பாத யாத்திரையாக சுமந்து கோயிலுக்கு வந்து நேர்த்திக் கடனை செலுத்த உள்ள நிலையில், இடும்பன் காவடி, தேர் காவடி, செயின் காவடி ஆகிய காவடிகளுக்கான டிக்கெட் முன்பதிவு புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் உள்ள கவுண்டர் அறையில் தொடங்கப்பட்டது.

'பங்குனி உத்திர திருவிழா 2024': காவடிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன...புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
Photo: Holy Tree Sri Balasubramaniar Temple

சுற்றுலா பயணி செய்த செயல்.. பெண் கொடுத்த புகார் – உடனே தூக்கிய போலீஸ்

பக்தர்கள் காவடிகளுக்கான கட்டணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில், அனைத்து வகையான காவடிகளுக்கான டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துள்ளதாக கோயில் நிர்வாகம், கடந்த மார்ச் 08- ஆம் தேதி அறிவித்துள்ளது. மேலும், காலையில் 3 பால் காவடிக்கான டிக்கெட்டும், மாலையில் 2 பால் காவடிக்கான டிக்கெட்டும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

காவடிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.