லிட்டில் இந்தியாவில் ஊழியர் செய்த உதவி.. சர்ப்ரைஸ் கொடுத்த வெளிநாட்டு பெண்

லிட்டில் இந்தியா
Stomp

லிட்டில் இந்தியா ரயில் நிலையத்தில் ஊழியர் செய்த உதவி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பயணிகள் சேவை நிலையத்தில் உள்ள ஊழியரின் வேலையிடத்தில் மியான்மர் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் அவரை அணுகியதாக குணசீலன் என்ற ஸ்டாம்ப் வாசகர் கூறினார்.

சிங்கப்பூர் TOTO குலுக்களில் ஜாக்பாட் “முதல் பரிசு S$10 மில்லியன்” – அதிஷ்டம் இருந்தால் கோடீஸ்வரன் தான்

மருத்துவமனையில் உள்ள தனது முதலாளியைப் பார்க்க தாம் வந்திருப்பதாகவும், ரயிலில் செல்ல EZ-Link கார்டில் போதுமான பணம் இருப்பு இல்லை என்றும், மேலும் பணப்பையையும் கொண்டு வர மறந்துவிட்டதாகவும் அவர் ஊழியரிடம் சொன்னார்.

பெண்ணின் நிலை அறிந்த ஊழியர், உடனே அவரின் EZ-Link கார்டை வாங்கி தனது வங்கி அட்டையில் இருந்து $10 டாப் அப் செய்துகொடுத்துள்ளார்.

இவ்வாறு உதவி தேவைப்படும் பயணிகளுக்கு அடிக்கடி இதைச் செய்கிறேன் என்று கூறிய ஊழியர், மீண்டும் லிட்டில் இந்தியாவுக்கு வரும்போது பணத்தைத் திருப்பித் தருமாறு தாம் அவர்களிடம் கூறுவேன் என்றார். ஆனால், யாரும் வழக்கமாக பணத்தை திரும்ப தருவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூர் TOTO குலுக்களில் ஜாக்பாட் “முதல் பரிசு S$10 மில்லியன்” – அதிஷ்டம் இருந்தால் கோடீஸ்வரன் தான்

இருப்பினும், “அதை பெரிய இழப்பாக நான் எடுத்துக் கொள்வதில்லை, ஏனெனில் இந்த $5 அல்லது $ 10 ஐ வைத்து நான் பணக்காரனாக இருக்கப் போவதில்லை” என்றார்.

ஆனால், அந்தப் பெண் பணத்தைத் திருப்பித் தருவதற்காக வேண்டி ஊழியரிடம் அவரின் பெயரை காகிதத்தில் எழுதச் சொன்னார்.

அடுத்த நாள்.., சக ஊழியர்களிடமிருந்து அந்த ஊழியருக்கு அழைப்பு வந்தது, யாரோ ஒருவர் காலையிலிருந்து அவரைத் தேடுவதாகவும், இரவு ஷிப்டில் இருப்பதால் மாலை 3 மணிக்கு மேல் தான் அவரை பார்க்க முடியும் என்றும் அந்த பெண்ணிடம் அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.

பின்னர், அன்று பிற்பகுதி நேரத்தில் பயணிகள் சேவை நிலையத்துக்குள் ஊழியர் அமர்ந்திருந்தபோது அதே பெண் உள்ளே வந்தார், கையில் $10 மற்றும் ஒரு சிறிய காகிதத் துண்டுடன் அவரை அணுகினார்.

பெரிய புன்னகை மற்றும் மகிழ்ச்சியான முகத்துடன் நன்றி கூறிய அந்த பெண், பணத்தையும் காகிதத்தையும் ஊழியரிடம் கொடுத்து விட்டு பின்னர் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினார்.

உங்களின் இரக்கம், நம்பிக்கை மற்றும் உதவிக்கு நன்றி என அதில் எழுதி இருந்தது.

தேவைப்படும் நபர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்கள் அனைவருக்கும் இதுபோன்ற பாராட்டுகள் கிடைக்கும் என்பதை தெரிவிக்க தனது கதையைப் பகிர்ந்து கொள்வதாக குணசீலன் கூறினார்.

இது போன்ற எதிர்பாராத உதவிகள் திரும்ப கிடைப்பது பொதுமக்களிடையே உதவும் எண்ணத்தையும் அதிகப்படுத்தும் என்று பலர் பாராட்டி வருகின்றனர்.

இச்சம்பவம் ஜனவரி 6 ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடந்தது.

சுற்றுலா பயணி செய்த செயல்.. பெண் கொடுத்த புகார் – உடனே தூக்கிய போலீஸ்