சிங்கப்பூர் பாசிர் பாஞ்சாங் வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக புதிய பூங்கா திறப்பு.!

Pasir Panjang Park opens
Pic: NParks

சிங்கப்பூரின் பாசிர் பாஞ்சாங் ரயில் நிலையத்தையும் ஜாலான் பெலேப்பா (Jalan Pelepah) குடியிருப்பு வட்டாரத்தையும் இணைக்கும் பூங்கா இன்று (04-09-2021) பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

பாசிர் பாஞ்சாங் என்பதற்கு மலாய் மொழியில் பொருள் மணல் நிறைந்த நீண்ட கடற்கரை என்பதாகும். கரையோர மணலின் அழகு போன்றவை பாசிர் பாஞ்சாங் பூங்காவின் முக்கிய அம்சங்களாக உள்ளது.

தனிமைக்கான செலவு அதிகம்.. திரும்ப வர முடியுமோ.. என்ற பல கவலைகளுடன் சொந்த நாட்டுக்கு செல்ல தயங்கும் ஊழியர்கள்!

இயற்கை, கடல்துறை வரலாறு போன்ற அம்சங்களுடன் இது அமைக்கப்பட்டுள்ளது, கரையோரமாக வளரக்கூடிய செடிகளும் பூங்காவில் நடப்பட்டன. பூங்காவைச் சுற்றி நடப்பதற்கு 450 மீட்டர் நடைபாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவுக்கு வருபவர்களிடம் பாசிர் பாஞ்சாங் வட்டாரத்தின் வரலாற்று பற்றி எடுத்துரைக்கப்படும் என்றும், இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட கலைப்பொருள்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் மூலம் பாசிர் பாஞ்சாங் சிறப்புகள் பற்றி மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்றும் தேசிய பூங்கா கழகம் முன்னதாக தெரிவித்திருந்தது.

பாசிர் பாஞ்சாங் பூங்காவின் மீதமுள்ள பகுதிகள் 2026 ஆம் ஆண்டிற்குள் கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் ஆற்றில் நீந்தச் சென்று உயிரிழந்த இந்தியர்