இரண்டடுக்கு பேருந்தின் கீழே சொருகிய மோட்டார் சைக்கிள்.. ஓட்டுநர் மருத்துவனையில்

pasir-ris-bus-motorcycle-accident
Telegram

பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 11 மற்றும் பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 12 ஆகிய சந்திப்பில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.

நேற்று முன்தினம் (நவ.27) பிற்பகல் நடந்த விபத்தில் SBS டிரான்சிட் இரண்டடுக்கு பேருந்தின் கீழே மோட்டார் சைக்கிள் சொருகியது.

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையா?

இந்த விபத்து தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

திங்கள்கிழமை மதியம் 12:35 மணியளவில் மேற்கூறிய சந்திப்பில் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உறுதிப்படுத்தியது.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டி சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், எங்களின் முதன்மை நோக்கம் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான உதவி செய்வது என்பதை SBS செய்தித் தொடர்பாளர் கிரேஸ் வு கூறினார்.

இதனால் ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் வாகன ஓட்டியிடம் SBS நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

காவல்துறையின் விசாரணைகளுக்கு உதவி வருவதாக கிரேஸ் வு கூறினார்.

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம்