சிங்கப்பூர் பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் COVID-19 சோதனை முடிவு வெளியீடு.!

Pasir Ris Street Black
Pic: Google Maps

சிங்கப்பூரில் உள்ள பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 51 (Pasir Ris Street 51) Black 559-ல் நடத்தப்பட்ட COVID-19 கிருமித்தொற்று பரிசோதனை முடிவுகளின் விவரங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்டுள்ளது.

பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 51இல் நேற்று (24-05-2021) நண்பகல் நிலவரப்படி, 285 குடியிருப்பாளர்கள் COVID-19 பரிசோதனையை மேற்கொண்டனர். அவர்களில், 188 பேருக்கு கிருமித்தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முகநூல் நிறுவனத்திடம் 1,260 கோரிக்கை மனுக்கள் அனுப்பிய சிங்கப்பூர் – இணைய குற்றங்களை விசாரிக்க நடவடிக்கை

மேலும், மீதமுள்ள 97 நபர்களுக்கு COVID-19 கிருமித்தொற்று பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட் 51 (Pasir Ris Street 51) Black 559-ல் இதுவரை யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றிருந்த பொது இடங்களின் புதிய பட்டியல்