சிங்கப்பூர் வர சிரமத்தை சந்திக்கும் பயணிகள்!

Photo: Lonely Planet

2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முதல், வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் விடிஎல் என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை இதன்மூலம் 5000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சிங்கப்பூரில் மேலும் 3,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்த இணையதளம் பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களுக்கும் செயலாற்ற இயலும் என்று இதனை செயல்படுத்தும் சிவில் விமான போக்குரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால் தற்போது இதில் சில சிரமங்கள் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வழங்கப்படும் கோவிட்-19 தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படுபவர்களிடையே தரப்படுத்தும் முறையில்லாததால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

சில வெளிநாட்டு பயணிகளின் வைத்திருக்கும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்கள் சிங்கப்பூர் அரசால் அங்கீகரிக்கப்படுவதில்லை. அந்தளவிற்கு தரம் குறைந்ததாகவே இருக்கிறது.

இதனால், விடிஎல் இணையம் சார்ந்த அமைப்பு, ஒவ்வொரு பயணிகளுக்கும் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறது. சான்றிதழ் சம்பந்தமாக ஏற்படும் சிரமங்களை தீர்ப்பதற்கும் முயன்று வருகின்றனர்.

இந்த ஆய்வில் அமெரிக்காவைச் சார்ந்த காமன்டிரஸ்ட் நெட்வொர்க், வேக்சினேஷன் கிரிடேன்ஷல் இனிசியேட்டிவ் போன்ற சுகாதார சான்றிதழ்கள் வழங்கும் அமைப்புகளும் அமைந்துள்ளது.

இந்த அமைப்புகள் வழங்கும் அறிவார்ந்த சுகாதார சான்றிதழ்கள், விடிஎல் இணையதள செயல்முறையின் போது கோவிட்-19 தடுப்பூசிப் போட்டதற்கான சான்றாக எடுத்துக்கொள்ளப்படும் என்று சிங்கப்பூரின் பயண பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பயணிகள் தங்களுடைய கோவிட்-19 தடுப்பூசிப் போட்டதற்கான சான்றிதழ்களை சமர்பிக்கும் போது, சில பயணிகள் ஒருசில சிரமங்களுக்கு ஆளாக நேரிடும் என்று இவ்வமைப்பு ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.

அதாவது அவர்களில் நாட்டில் வழங்கும் ஒருசில சான்றிதழ்கள் சிங்கப்பூரில் அங்கீகரிக்கக்கூடிய தரத்தைப் பெற்றிருக்காது என்றனர்.

விடிஎல் திட்டத்தில் அமைந்துள்ள அநேக நாடுகளின் கோவிட்-19 தடுப்பூசிப் போட்டதற்கான சான்றிதழ்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தாலும், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இவ்வாறு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா அந்த நாட்டின் மாநில சுகாதார அமைப்புகள், மருந்தகங்கள் மற்றும் இதர சுகாதார பராமரிப்பு அமைப்புகளைச் சார்ந்துள்ளது. ஆனால் கனடா அவ்வாறு இல்லை.

எல்லா நாடுகளிலும் அங்கீகரித்துக் கொள்ளக்கூடிய கோவிட்-19 தடுப்பூசிப் போட்டதற்கான சான்றிதழ்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.

ஆனால் சிங்கப்பூர் நாட்டிற்கு கோவிட்-19 தடுப்பூசிப் போட்டதற்கான சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய, அச்சான்றிதழ்களை வழங்கும் சுகாதார அமைப்புகளிடமிருந்து, அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள கூடிய சான்றிதழ்களே தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தாெற்று சூழ்நிலையில் சிறப்பாக செயல்படும் சிங்கப்பூர்!