குறைந்த கூட்ட நெரிசல் மற்றும் தூய்மை – பயணிகள் மனநிறைவு..!

(Photo: TODAY)

கொரோனா கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூரில் அதிரடி திட்டம் நடப்பில் இருந்தது, அச்சமயம் கூட்ட நெரிசல் குறைவாக இருந்ததாகவும், மேலும் நிலவிய தூய்மையும், பயணிகளுக்கு அதிக அளவில் மனநிறைவை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கள், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் நடத்தும் பொதுப் போக்குவரத்துப் பயணிகள் மனநிறைவு கருத்தாய்வில் தெரியவந்ததாக “செய்தி” குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உள்ள மாலில் சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்ட நபர் கைது..!!

அதாவது, இந்த ஆண்டின் மே முதல் ஜூலை மாதம் வரை நடைபெற்ற இந்த ஆய்வில் சுமார் 7,500 பேர் பங்கேற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகள் மனநிறைவு கருத்தாய்வில், கடந்த ஆண்டில் 66.1 புள்ளிகளை பெற்றிருந்த MRT கட்டமைப்பு, இந்த ஆண்டில் 73.4 புள்ளிகளைப் பெற்றது.

அதே போல, கடந்த ஆண்டு 68.9 சதவீதம் இருந்த பொதுப் பேருந்துகளில் மனநிறைவு விகிதம் இந்த ஆண்டு 74.4 சதவீதம் பதிவானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிரடி திட்டத்துக்குப் பிறகு, ரயில் மற்றும் பேருந்து பயணம் தொடர்பான மனநிறைவு விகிதம் குறைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கான காரணமாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 8 உணவு-பான கடைகளை மூட உத்தரவு; 32 பேருக்கு அபராதம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…