சிங்கப்பூரில் மேலும் 8 உணவு-பான கடைகளை மூட உத்தரவு; 32 பேருக்கு அபராதம்..!

Flouting Covid-19 measures F&B outlets ordered close
(PHOTOS: Singapore Food Agency)

சிங்கப்பூரில் மேலும் 8 உணவு-பான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதுடன் 14 விற்பனை நிலையங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) நேற்று (செப்டம்பர் 29) தெரிவித்துள்ளது.

இதில் உணவு-பான கடைகளில் கோவிட் -19 எதிராக வகுக்கப்பட்டுள்ள விதிகளை மீறியதற்காக 32 பேருக்கு தலா S$300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் தேசியக் கொடியை அகற்றுவது தொடர்பாக அமைச்சர் எட்வின் டோங் பதிவு..!

அதாவது உணவு அருந்திய பிறகு அல்லது பானங்களை குடித்தபின் உடனடியாக முகக்கவசம் அணிய தவறியது, மேஜைகளுக்கு இடையில் குழுக்களை ஒன்றிணைத்தல் மற்றும் ஐந்து பேருக்கு மேல் குழுக்களில் அமர்ந்திருத்தல் போன்ற விதிமீறல் தொடர்பில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்த 8 உணவு-பான கடைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது சிங்கப்பூர் உணவு அமைப்பு, நகரச் சீரமைப்பு ஆணையம், சிங்கப்பூர்ப் பயணத்துறை கழகம் ஆகியவை நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டது.

பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை மீறிய அந்த 14 கடைகளில், 13 கடைகளுக்கு S$1,000 அபராதம் மற்றும் மீண்டும் விதியை மீறிய ஒரு கடைக்கு S$2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், சுமார் 240 உணவு-பான கடைகளில் அரசாங்க அமைப்புகள் கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்டதாக MSE மேலும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக் கொண்ட தமிழக ஊழியரின் மகள்கள் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் போகலாம்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…