சிங்கப்பூர் தேசியக் கொடியை அகற்றுவது தொடர்பாக அமைச்சர் எட்வின் டோங் பதிவு..!

Singapore flag Fine Edwin Tong
(PHOTO: Reuters)

சிங்கப்பூரில் இன்று செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு, தங்கள் வீடுகளுக்கு வெளியே கட்டியுள்ள தேசியக் கொடியை அகற்றாத குடியிருப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கும் எண்ணம் இல்லை.

இதனை கலாச்சார, சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சர் மற்றும் இரண்டாவது சட்டத்துறை அமைச்சர் எட்வின் டோங் இன்று (செப் 30) ​​தெரிவித்தார்.

இதற்கு முன்னர், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே கட்டியுள்ள தேசியக் கொடியை, இன்று செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நீக்க வேண்டும் என்றும், தவறியவர்களுக்கு S$1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக் கொண்ட தமிழக ஊழியரின் மகள்கள் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் போகலாம்.!

இன்று செப்டம்பர் 30க்குப் பிறகு தொடர்ந்து சிங்கப்பூர் கொடியை பறக்கவிட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில கவலைகள் எழுப்பப்பட்டதாக பேஸ்புக் பதிவில் திரு டோங் கூறினார்.

“நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்: எனக்குத் தெரிந்தவரை, இதற்காக யாருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை.

அவ்வாறு செய்ய நாங்கள் திட்டமிடவில்லை” என்று திரு டோங் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை, கொடி கம்பம் இல்லாமல் ஒரு கட்டிடத்திற்கு வெளியே அல்லது திறந்தவெளியில் கொடியைக் கட்டலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பரவிக்கொண்டிருந்த கோவிட் -19 தொற்றுநோயின் போது ஒற்றுமை அடையாளமாக ஏப்ரல் 25 முதல் செப்டம்பர் 30 வரை தேசிய கொடியைக் கட்ட அனுமதி காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கான கடன் வரும் மாதங்களில் உயரும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…