சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக் கொண்ட தமிழக ஊழியரின் மகள்கள் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் போகலாம்.!

Tamilnadu Worker died in Singapore
(Photo: A Panjali and ItsRainingRaincoats)

சிங்கப்பூரில், 46 வயதான அழகு பெரியகருப்பன் என்ற தமிழக ஊழியர், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கூ டெக் புவாட் மருத்துவமனையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அவர், மருத்துவமனை படிக்கட்டில் அசைவில்லாமல் இருந்ததாகவும், பின்னர் அவருக்கு ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்ததாகவும் அன்று தெரிவிக்கப்பட்டது.

அவரது மரணத்தில் எந்தவிதமான சதிச்செயலும் சந்தேகிக்கப்படவில்லை என்று விசாரணை அதிகாரி கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 24) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக் கொண்ட தமிழக ஊழியர் – மரணத்தில் எந்த சதிச்செயலும் இல்லை..!

அழகு பெரியகருப்பனுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்ட விஷயம் மருத்துவப் பரிசோதனையில் உறுதியான நிலையில், ஐந்து நாட்கள் கழித்து, ஏப்ரல் 23ஆம் தேதி அதிகாலை அவர் தமது கைபேசியில் இரண்டு காணொளிகளைப் பதிவு செய்தார்.

அதில் தாம் செய்யப்போவதைப் பற்றி தெரிவித்தார். அதனையடுத்து, கழிவறையின் ஜன்னலைத் திறந்து அதன் வழியாக கீழே குதித்து மாண்டார்.

இந்நிலையில், வாழ்வில் மிகக் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது எனவும், பத்திரமாக சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் எனவும் உயிரை மாய்த்துக்கொண்ட இந்திய ஊழியர் அழகு பெரியகருப்பனின் மனைவி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கான கடன் வரும் மாதங்களில் உயரும்..!

அழகு பெரியகருப்பன் தமது உயிரை மாய்த்துக்கொண்ட விஷயம் பற்றி கேள்விப்பட்டதும் அவர்கள் மீளாத் துயரத்தில் அவதிப்படுகின்றனர்.

அவர் ஏன் இப்படி செய்தார் என்று எங்களுக்குப் புரியவில்லை பாசமான கணவராகவும், தந்தையாகவும் அவர் இருந்தார் என தி நியூ பேப்பர் நாளிதழிடம் திரு அழகு பெரியகருப்பனின் மனைவி பாஞ்சாலி தெரிவித்தார்.

அவரது மூத்த மகளும் (16 வயது) இரண்டாவது மகளும் (11 வயது) சொல்லொண்ணா சோகத்தில் வாடுவதாக அவர் கவலையுடன் தெரிவித்தார். கடைசி மகளுக்கு 6 வயது ஆகிறது என்றும் தமது குடும்பத்துக்கு ஏற்பட்ட கொடுமையை அவரால் உணர முடியவில்லை என்றும் பாஞ்சாலி கூறினார்.

அழகு பெரியகருப்பன் எடுத்த விபரீத முடிவு அவரது மூன்று மகள்களையும் அடுத்த பல ஆண்டுகளுக்குப் பெருமளவில் பாதிக்கும் என்று தி நியூ பேப்பர் நாளிதழிடம் உளவியல் நிபுணர் கேரல் பேல்ஹெட்செட் தெரிவித்தார்.

மேலும் அவர், திரு அழகு பெரியகருப்பனின் மகள்களால் இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் மேலும் சில வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தொற்று இல்லை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…