சிங்கப்பூரில் உள்ள மாலில் சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்ட நபர் கைது..!!

(Photo Credits Today)

சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையுடன் முழுநேர தேசிய சேவையாளராக இருந்து வரும் அலரிக் லிம் கிக்சியன், ஒரு 13 வயது சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக ஒரு குற்றச்சாட்டு கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 28) அன்று வைக்கப்பட்டது.

இந்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டு கைது செய்யப்பட்ட பின்னர், விசாரணையில் பெண்களை தவறாக காணொளி எடுத்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 8 உணவு-பான கடைகளை மூட உத்தரவு; 32 பேருக்கு அபராதம்..!

காஸ்ப்ளே நிகழ்வில் லிம் அந்த 13 வயது சிறுமியை சந்தித்து, பின்னர் இன்ஸ்டாகிராமில் பேசத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

அதில் அவர் ஒரு புகைப்படக்காரர் என்று கூறிய லிம், ஒரு தனியார் படப்பிடிப்பு நடத்தலாம் என்று சிறுமியிடம் கேட்டுள்ளார்.

13 வயதான பாதிக்கப்பட்ட சிறுமி இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார், ஆனால் பாண்டேஜ்கள் மற்றும் பொருட்கள் சம்பந்தப்பட்ட ஒரு தனியார் படப்பிடிப்பில் பங்கேற்க ஆர்வமாக இருப்பதாக அந்த சிறுமி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி பின்னர் ஒரு படப்பிடிப்பை முயற்சிக்க ஒப்புக்கொண்டார், ஆனால் அவர் முழு நிர்வாணமாக முயற்சிக்க விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

ஒரு ஷாப்பிங் மாலில் ஊனமுற்றோருக்கான கழிப்பறையில் சோதனை புகைப்படம் எடுப்பதாக சொல்லி லிம் அவள் மீது ஒரு கயிறை கட்டி, கைவிலங்குகளைப் பயன்படுத்தி கையை கட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் தேசியக் கொடியை அகற்றுவது தொடர்பாக அமைச்சர் எட்வின் டோங் பதிவு..!

பின்னர் அவர், அந்த சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொள்ள தொடங்கினார் என்றும் , தன்னை மேலும் துன்புறுத்துவார் என்று பயந்ததால் உதவிக்காக கத்தவில்லை என்று பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.

சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவரிடமிருந்து கைவிலங்கு மற்றும் கயிற்றை லிம் அகற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் பாதிக்கப்பட்டவர் ஒரு பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது என்று அவர் தனது தாயிடம் சொன்னார், மறுநாள் அவர்கள் காவல்துறையிடம் புகார் ஒன்றை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர், லிம் கைது செய்யப்பட்டார் மற்றும் அவரது தொலைபேசியை பரிசோதித்ததில் அவர் 2018 ஜனவரியில் ஒரு ரயில் நிலையத்தில் பதிவு செய்த மூன்று பெண்களை தவறாக எடுத்த காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுமியிடம் நடந்து கொண்ட இந்த தவறான செயலுக்கு, லிம் ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் அல்லது S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக் கொண்ட தமிழக ஊழியரின் மகள்கள் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் போகலாம்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…