தங்க கைச்செயினை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்த நபர் – அடகு கடையில் கைவரிசை: CCTV காட்சிகளை வைத்து தூக்கிய போலீஸ்

pawnshop gold chain theft fled away arrest
SPF

அடகு கடையில் தங்க கைச்செயினை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்த ஆடவர் பிடிபட்டார்.

அடகுக் கடைக்குச் சென்ற அந்த ஆடவர், தங்க நகைகளை வாங்குவது போல பார்த்துக்கொண்டு இருந்தார் என சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியதற்கு உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி, குறைந்த விலையில் சேவை – அதிரடி அறிவிப்பு

பின்னர் ​​தங்க கைச்செயினை எடுத்துக்கொண்டு கடையில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த வெள்ளியன்று (ஜூன் 9) மதியம் 2.18 மணியளவில் ரிவர் வேலியில் உள்ள Indus சாலையில் நடந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், 31 வயதான ஆடவரின் அடையாளத்தை அதிகாரிகள் கண்டறிந்து, ஆர்ச்சர்ட் சாலைக்கு அருகில் கைது செய்தனர்.

அதாவது புகார் வந்த எட்டு மணி நேரத்திற்குள் அவரை கைது செய்து போலீசார் அதிரடி காட்டினர்.

அதன் பின்னர், அவரிடம் இருந்து சுமார் $8,655 பெறுமதியான ரொக்கம் மற்றும் தங்க கைச்செயின் மீட்கப்பட்டது.

இதுபோன்ற குற்றத்திற்கு, இது ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

நண்டு மசாலாவில் சிம் கார்டு ட்ரே பின்… ஒன்னு வாங்குனா ஒன்னு பிரீ – நொந்துபோன ஊழியர்