COVID-19: சிங்கப்பூரில் பாலர் பள்ளி 2 வாரங்களுக்கு மூடல்..!

PCF Sparkletots childrens covid

PAP கம்யூனிட்டி ஃபவுண்டேஷன் (PCF) ஸ்பார்க்லேட்டோட்ஸ் (Sparkletots) பள்ளி இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன் மாணவர்களும், ஊழியர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. ஏனெனில் அதன் சில ஊழியர்கள் COVID-19 சோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கும் காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: மேலும் புதிதாக 49 நபர்களை உறுதிப்படுத்திய சிங்கப்பூர்..!

அதற்கு முன்னதாக, அப்பள்ளி ஆசிரியர்களில் ஒருவருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் முழுமையான சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்காக பள்ளி ஒரு நாள் மூடப்பட்டது.

பின்னர் செவ்வாய்க்கிழமை இரவு (மார்ச் 24), சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த சில ஊழியர்களைக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் COVID-19 சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, அனைத்து பள்ளி ஊழியர்களுக்கும் குழந்தைகளுக்கும் தனிமைப்படுத்த உத்தரவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையைத் தொடர்ந்து கண்காணிப்பப்பட்டு வருவதாகவும், பிள்ளைகள், பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் ஆரம்பக்காலக் குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு (ECDA) குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID -19: வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளின் கவனத்திற்கு..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil