COVID -19: வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளின் கவனத்திற்கு..!

COVID-19: All travellers entering Singapore from Mar 27 must submit health declaration forms online
COVID-19: All travellers entering Singapore from Mar 27 must submit health declaration forms online

சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளும், மார்ச் 27ஆம் தேதி காலை 9 மணி முதல் ஆன்லைனில் சுகாதார தகவல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) திங்கள்கிழமை (மார்ச் 23) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்வாசிகள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள், தங்கள் சுகாதார தகவல் அறிக்கையை SG Arrival Card (SGAC) மின் சேவை மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரே நாளில் புதிதாக 54 பேருக்கு COVID-19 தொற்று உறுதி; மொத்தம் 500ஐ தாண்டியது..!

சுகாதார தகவல் அறிக்கை குறித்த சேவை மார்ச் 27க்கு முன்னர் கிடைக்கப்பெறும், இதனால் அதற்கு முன்னர் வரவிருக்கும் பயணிகள் தங்கள் வருகையை முன்கூட்டியே பூர்த்தி செய்ய முடியும் என்று ICA தெரிவித்துள்ளது.

இது சிங்கப்பூருக்குள், வெளிநாடுகளில் இருந்து வரும் COVID-19 அபாயத்தைத் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

மேலும், உலகளாவிய COVID-19 நிலைமையின் அடிப்படையில் இது மதிப்பாய்வு செய்யப்படும் “என்று ஊடக வெளியீட்டில் ICA தெரிவித்துள்ளது.

சுகாதார தகவல் அறிக்கையை சமர்ப்பிக்கும் அனைத்து சிங்கப்பூரர்களும், நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்களும் இணையதளத்தில் “Residents” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும், அதன் பிறகு அவர்களின் உடல்நலம் மற்றும் சமீபத்திய பயணத் தகவல்களையும், தனிப்பட்ட மற்றும் தொடர்பு விவரங்களையும் வழங்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் 21,200க்கும் மேற்பட்டோருக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு – ICA..!

“அனைத்து பயணிகளும் சிங்கப்பூர் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தங்கள் சுகாதார தகவல் அறிக்கை படிவத்தை சமர்ப்பிக்கலாம்” என்று ICA தெரிவித்துள்ளது.

மேலும், சுகாதார நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், மீண்டும் சுகாதார தகவல் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

தவறான தகவல்களை வழங்குவோருக்கு தண்டனை:

முதல் குற்றத்திற்கு, S$10,000 வரை அபராதமும் ஆறு மாதங்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படலாம். மீண்டும் குற்றத்தை செய்யும் பட்சத்தில் அந்த தண்டனைகள் இரட்டிப்பாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil