COVID-19: சிங்கப்பூரில் 21,200க்கும் மேற்பட்டோருக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு – ICA..!

Singapore COVID-19: More than 21,200 stay-home notices issued - ICA
Singapore COVID-19: More than 21,200 stay-home notices issued - ICA

சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை (மார்ச் 19) நிலவரப்படி, சுமார் 21,200 க்கும் மேற்பட்டோருக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு (Stay-Home Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு கடந்த மார்ச் 12 முதல் மார்ச் 19 வரை, சுமார் 13,900-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கட்டாய உத்தரவை மீறிய 89 பேரின் வேலை அனுமதி ரத்து..!

இந்த வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. உத்தரவு பெற்ற நபர், 14 நாட்கள் எல்லா நேரமும் வீட்டிலேயே இருக்கவேண்டும்.

கடந்த மார்ச் 20, இரவு 11.59 மணி முதல் அனைத்து நாடுகளிலிருந்தும் / பிராந்தியங்களிலிருந்தும் திரும்பும் பயணிகளுக்கு இந்த உத்தரவு விரிவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : சிங்கப்பூர் திரும்பும் அனைவருக்கும் கட்டாயம் வீட்டில் தங்கும் உத்தரவு..!

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்படும் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்:

  • எல்லா நேரத்திலும் வீட்டிலேயே இருக்க வேண்டும்
  • உணவு அல்லது அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வெளியே செல்லவேண்டாம்
  • விநியோக சேவைகளைப் பயன்படுத்தவும் அல்லது அண்டைவீட்டார் / அடித்தள அமைப்புகளின் உதவியை நாட வேண்டும்
  • பிறருடன் தொடர்பைக் குறைத்துக்கொள்ளவும்
  • வருகையாளர்களைத் தவிர்க்கவும்

தண்டனைகள்

இந்த உத்தரவை மீறி, முதல் முறை குற்றம் புரிவோருக்கு $10,000 அபராதம் விதிக்கப்படலாம், 6-மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil