சிங்கப்பூரில் கட்டாய உத்தரவை மீறிய 89 பேரின் வேலை அனுமதி ரத்து..!

COVID-19: 89 work passes revoked
COVID-19: 89 work passes revoked - MOM

நுழைவு ஒப்புதல் மற்றும் கட்டாய வீட்டில் தங்கும் உத்தரவுகளை மீறியதற்காக மொத்தம் 89 நபர்களுடைய வேலை அனுமதி ரத்து (மார்ச் 21) செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஊழியர்கள் சிங்கப்பூரில் நிரந்தரமாக வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 47 பேருக்கு COVID-19 உறுதி; மொத்தம் 400ஐ தாண்டியது..!

ரத்து செய்யப்பட்ட 89 பேரில், 73 பேர் COVID-19 பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால், மனிதவள அமைச்சகத்திடம் நுழைவு ஒப்புதல் பெறாமல் சிங்கப்பூருக்குள் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள 16 வேலை அனுமதி வைத்திருப்பவர்கள், கட்டாய விடுப்பு (LOA) அல்லது வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறியுள்ளனர்.

இதில் சிலர் தங்கள் பணியிடங்களில் பிடிப்பட்டதாகவும், மற்றவர்கள் தங்கள் LOA அல்லது வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின் காலகட்டத்தில் அவர்கள் வசிக்கும் இடத்தை விட்டு வெளியேறியபோது பிடிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு விதிக்கப்பட்ட பின்னர் முதல் மாதத்தில் இந்த மீறல்கள் பல நிகழ்ந்துள்ளதாக MOM குறிப்பிட்டுள்ளது. மேலும், மீறல்களின் எண்ணிக்கை இரண்டாவது மாதத்தில் நான்காகக் குறைந்துள்ளது.

MOM-இன் அனுமதி பெறும் வரை சிங்கப்பூருக்கு பயணத் திட்டங்களைச் செய்ய வேண்டாம் என்று முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், விதிமுறைகளை மீறும் முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று MOM எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இருவர் நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்பு..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil