சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறிய 8 பேருக்கு நிரந்தரமாக வேலைசெய்யத் தடை

foreign workers singapore job illegal
(Photo: Ministry of Manpower)

சிங்கப்பூரின் கோவிட் -19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ், பிரிட்டிஷ் நாட்டவர்கள் 8 பேர் இனி சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இவர்களது வேலை அனுமதிகள் (work passes) அவர்களின் முன்னாள் முதலாளிகளால் ரத்து செய்யப்பட்டதாகவும் மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது.

“புதிய நோய் பரவல் குழுமங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்க வழிவகுக்கிறது” – பிரதமர் லீ

கடந்த டிசம்பரில், அந்த எட்டு பேர் படகில் ஒன்றாக கூடியிருந்த 10 பேர் கொண்ட குழுவில் அடங்குவர். அந்த நேரத்தில், பொதுஇடத்தில் அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே ஒன்றுகூட அனுமதி இருந்தது.

படகில் இருந்த மற்ற இரண்டு நபர்களுக்கு, இதற்கு முன்னரே சிங்கப்பூரில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டது. அந்த எட்டு நபர்கள் விதிமுறைகளை மீறியதாக இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

அனைத்து work pass வைத்திருப்பவர்களும், நடைமுறையில் உள்ள விதிகளுக்கு இணங்கவும், பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள், தனிமை உத்தரவுகள் மற்றும் வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்புகளைப் பின்பற்றவும் MOM நினைவூட்டுகிறது.

“சிங்கப்பூர் மாறுபட்ட கிருமி” பற்றி பொய்யான தகவல் – பேஸ்புக், ட்விட்டர், SPH இதழ்களுக்கு திருத்த உத்தரவு