“சிங்கப்பூர் மாறுபட்ட கிருமி” பற்றி பொய்யான தகவல் – பேஸ்புக், ட்விட்டர், SPH இதழ்களுக்கு திருத்த உத்தரவு

POFMA directive issued Singapore variant COVID-19 falsehood

சிங்கப்பூர் மாறுபட்ட கிருமி பற்றி வெளியிடப்பட்ட பொய்யான தகவல்களை, POFMA என்னும் ஆன்லைன் வழி பொய்கள் மற்றும் சூழ்ச்சிக்கு எதிரான பாதுகாப்பு சட்டத்தின்கீழ் திருத்தம் செய்ய பேஸ்புக், ட்விட்டர் மற்றும் SPH இதழ்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களின் வழியாக ஆன்லைனில் பரப்பப்படும் தவறான தகவல்கள் குறித்து அறிந்திருப்பதாக சுகாதார அமைச்சகம் (MOH) இன்று (மே 20) கூறியுள்ளது.

“டெல்லி முதலமைச்சரின் பதிவில் எந்த உண்மையும் இல்லை” – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் விளக்கம்

COVID-19 தொற்றுநோயின் முன்னர் அறியப்படாத மாறுபட்ட கிருமி சிங்கப்பூரில் உருவானதாகவும் மற்றும் / அல்லது அந்த கிருமி சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு பரவும் அபாயம் உள்ளதாகவும் ஒரு பொய்யான செய்தி பரவி வருவதாக அது தெரிவித்துள்ளது.

சமூக ஊடக நிறுவனங்களுக்கும் மற்றும் எஸ்.பி.எச் பத்திரிகைகளுக்கும் இதுபற்றிய பொதுவான திருத்த வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் போஃப்மா அலுவலகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

“டெல்லி முதலமைச்சரின் பதிவில் எந்த உண்மையும் இல்லை” – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் விளக்கம்