“புதிய நோய் பரவல் குழுமங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்க வழிவகுக்கிறது” – பிரதமர் லீ

Pmlee congrats govt officers
PHOTO: MCI

கோவிட் -19 தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் ஒருபோதும் சோர்ந்துவிடாது என்று பிரதமர் லீ ஹிசியன் லூங் தெரிவித்துள்ளார்.

அதே போல, மாற்றம் அடையும் கிருமி தொற்றினை எதிர்த்து போராடும் முயற்சியில் எப்போதும் ஒரு படி முன்னே இருக்கவேண்டும் என்பதை சிங்கப்பூர் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

“சிங்கப்பூர் மாறுபட்ட கிருமி” பற்றி பொய்யான தகவல் – பேஸ்புக், ட்விட்டர், SPH இதழ்களுக்கு திருத்த உத்தரவு

சிங்கப்பூரில் கோவிட் -19 இறப்புகள் 31 என்ற குறைந்த எண்ணிக்கையில் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், சூழல் நிலையாக இருப்பதாகவும் கூறினார்.

ஆனால், அதிகரிக்கும் நோய் பரவல் குழுமங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை மீண்டும் விதிக்க வழிவகுக்கிறது, என்றார்.

ஒவ்வொரு முறையும் கோவிட் -19 சூழல் கட்டுக்குள் உள்ளது என்று நினைக்கும்போது, அது ஒரு புதிய திசையில் மேலெழுகிறது என்று திரு லீ கூறினார்.

கிருமிப்பரவல் சம்பவம் வேறு எங்கு ஏற்பட்டாலும், அது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அதற்கு அர்த்தம் என்று அவர் கூறினார்.

நேற்று புதன்கிழமை (மே 19) அமெரிக்க வர்த்தக சபையின் பொருளாதார மீட்புக்கான உலகளாவிய மன்றத்தில் திரு லீ பேசினார்.

இந்தியாவின் தற்போதைய இக்கட்டான சூழல் குறித்து அவர் கவலை தெரிவித்தார், ஆனால் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவிலும் கூட, பலருக்கு தடுப்பூசி இன்னும் போடப்படவில்லை, இருப்பினும் பதிவான பாதிப்புகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

“டெல்லி முதலமைச்சரின் பதிவில் எந்த உண்மையும் இல்லை” – சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் விளக்கம்