சிங்கப்பூரில் தனிநபர் தகவல்கள் கசிவு; நிறுவனங்களுக்கு அதிரடி அபராதம் விதிப்பு.!

personal data lapses affecting
Pic: Mika Baumeister/Unsplash

சிங்கப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு தற்காப்பு அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் ஆயுதப்படை சேவையாளர்கள் (SAF) 98,000 பேரின் தகவல்கள் கசிந்த காரணத்திற்காக தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் இந்த மாதம் 10ம் தேதி சுகாதாரப் பராமரிப்பு பயிற்சி வழங்குநரான எச்எம்ஐ சுகாதார சேவைகள் கழகத்திற்கு S$35,000 அபராதம் வித்துள்ளது.

இந்த சம்பவத்தில், 250 எச்எம்ஐ (HMI) ஊழியர்கள் உட்பட சுமார் 1,10,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் தனிப்பட்ட தகவல்களான பெயர்கள், தொடர்பு எண்கள், நிதி தொடர்பான தகவல்கள் போன்றவற்றை பாதுகாக்க தவறியதன் விளைவாக பல்வேறு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு மொத்தம் S$75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக மொத்தம் சுமார் 6,00,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் முகப்பராமரிப்பு சேவைகளுக்கு அனுமதி; அதிகளவில் மக்கள் முன்பதிவு.!

இதனை தவிர்த்து, மின் வர்த்தக தீர்வுகள் நிறுவனமான வெப்காடா 5,20,000 பேரின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க தவறியதற்காக தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் அதற்கு S$25,000 அபராதம் விதித்துள்ளது.

மேலும், அரசிற்கு தளவாட சேவைகளை வழங்கி வரும் எஸ்டி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், தற்காப்பு அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் ஆயுதப்படையின் 2,400 ஊழியர்களின் தகவல்களை பாதுகாக்க தவறிய காரணத்தால் அதற்கு S$8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி, ‘லார்சன் அண்ட் டோப்ரோ இன்ஃபோடெக் நிறுவனத்துக்கு S$7,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய உட்லேண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் திறப்பு!