சிங்கப்பூரில் முகப்பராமரிப்பு சேவைகளுக்கு அனுமதி; அதிகளவில் மக்கள் முன்பதிவு.!

Pic: AFP/Noah Sseelam

சிங்கப்பூரில் சமூக அளவில் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் குறைந்து வரும் நிலையில், சில கட்டுப்பாடுகள் நேற்று முதல் (14-06-2021) தளர்த்தப்பட்டன.

முகப்பராமரிப்பு, நீராவிக் குளியல் போன்ற முகக்கவசம் பயன்படுத்த முடியாத சேவைகள் மீண்டும் தொடங்க நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முகப்பராமரிப்பு போன்ற சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பயன்படுத்த மக்கள் அதிகளவில் முன்பதிவு செய்து வருகின்றனர், இதனால் பராமரிப்பு நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

மிகப்பெரிய உட்லேண்ட்ஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் திறப்பு!

முகப்பராமரிப்பு போன்ற சேவைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அடுத்த சில மாதங்களில் கட்டாய கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சமூக அளவில் கிருமித்தொற்று பரவலால் வாடிக்கையாளர்களின் அன்றாட எண்ணிக்கையைக் கடைகள் கட்டுப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு அறையிலும் கூடுதல் நேரம் கிருமிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களின் மன திருப்திக்காக சில நிலையங்கள் சுய பரிசோதனைக் கருவிகளை வாங்கி ஊழியர்களுக்குப் பரிசோதனையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன.

சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிப்பு குறைவு; சில கட்டுப்பாடுகள் தளர்வு.!