சிங்கப்பூரில் தேசிய தின அன்பளிப்பு பைகள் வேண்டாம் என்று 40,000 பேர் கையெழுத்து..!

Gift bags are something that Singaporeans can look forward to in a difficult time, but an Internet petition has said that some 40,000 people have signed up saying they don't want to receive them.
Gift bags are something that Singaporeans can look forward to in a difficult time, but an Internet petition has said that some 40,000 people have signed up saying they don't want to receive them. (Photo: seithi)

சிங்கப்பூரில் அன்பளிப்புப் பொருள்கள் அடங்கிய பை ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேசிய தினத்தை ஒட்டி இவ்வாண்டு வழங்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

சிங்கப்பூரர்கள் எதிர்நோக்கும் இந்த கடினமான காலத்தில் அன்பளிப்புப் பைகள் மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஒன்று தான்.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட தங்கும் வசதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபடும் MATAR ரோபோ..!

ஆனால், இணைய மனு ஒன்றில் சுமார் 40,000 பேர் அந்தப் பைகளைப் பெற விருப்பமில்லை என்று கூறி கையெழுத்திட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அன்பளிப்புப் பைகளைத் தயார் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் செலவினங்களை மற்ற நற்செயல்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று மனுவில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மனுவைத் தொடங்கிய கௌஷிக் இளங்கோ, ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் அந்த பைகளில் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு பதிலாக, அன்பளிப்புப் பொருள்களுக்கான வளங்களை, தேவைப்படும் நபர்களுக்கு வழங்குமாறு மனுவில் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்ட்டது.

அன்பளிப்புப் பைகளைப் பெற விரும்பாதவர்களுக்கு அதிலிருந்து விலகிக்கொள்ளும் வசதியை அமைத்துத் தருமாறும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

இந்த மனு 50,000 கையெழுத்துகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளது என்று செய்தி மீடியா கார்ப் குறிப்பிட்டுள்ளது.

Source : Seithi Mediacorp

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்காலிக தங்கும் வசதிகளாக மாற்றப்பட உள்ள இரண்டு முன்னாள் பள்ளி வளாகங்கள்..!