சிங்கப்பூரில் முகக்கவசம் அணிய சொன்ன அதிகாரிக்கும், கடைக்காரருக்கும் இடையே கைகலப்பு.!

Petshop owner fined fighting
Pic: File/Today

சிங்கப்பூர் யீஷுன் சென்ட்ரல் 1ல் உள்ள Little Pets Kingdom என்ற செல்லப்பிராணிகள் விற்கும் கடைக்காரான 48 வயது ஆடவர். இவர் கடையில் முகக்கவசம் அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரி கடைக்காரரை முகக்கவசம் அணிய சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரிக்கும், கடைக்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சிங்கப்பூரில் கடைக்குள் புகுந்து மதுபானம் திருட்டு; இளைஞர் கைது.!

பின்னர், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது, தரையில் உருண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இவர்களை பக்கத்துக் கடையில் இருந்த ஆடவர் விலக்கினார்.

பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரியும், கடைக்காரரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, கடைக்காரர் நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 09) தம் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தகாத வார்த்தைகளால் அதிகாரியை திட்டிய மற்றொரு குற்றச்சாட்டும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும், பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரி மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரியுடன் சண்டையில் ஈடுபட்டதற்காக அந்த கடைக்காரருக்கு 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. அவர் மீதான வழக்கு இந்த மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

சாங்கி விமான நிலைய தொழிலாளர்களுக்கு பழப்பெட்டிகள் வழங்கல்!