சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறைச் செயலாளர் சந்திப்பு!

Photo: Minister for Foreign Affairs, Singapore

அரசு முறை பயணமாக இன்று (31/01/2022) சிங்கப்பூர் வந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலாளர் தியோடோரோ எல்.லோக்சின் (Secretary of Foreign Affairs of the Republic of the Philippines Teodoro L. Locsin Jr.), இன்று (31/01/2022) காலை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை (Minister for Foreign Affairs Dr Vivian Balakrishnan) நேரில் சந்தித்துப் பேசினார். முன்னதாக, அவருக்கு காலை உணவு விருந்தை அளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்.

சிங்கப்பூரில் 5 வாகன நிறுத்துமிடங்களில் நிறுவப்பட்டுள்ள “மின்சார வாகன சார்ஜர்கள்”

இச்சந்திப்பின் போது, அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும், பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறைச் செயலாளர் தியோடோரோ எல்.லோக்சினும், சிங்கப்பூருக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான சிறந்த மற்றும் நீண்டகால உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தினர். பாதுகாப்பு, கல்வி ஆகிய துறைகளில் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

ஆசியான் மையத்தன்மை, ஒற்றுமை மற்றும் நம்பகத்தன்மை, மியான்மர் விவகாரம் உட்பட, பிராந்திய மற்றும் சர்வதேச வளர்ச்சிகள் குறித்து பயனுள்ள கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அதேபோல், இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் உறவுகள் செழித்து வருவதை அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், கொரோனா நிலைமை தணிந்தவுடன் இரு நாடுகளிடையேயான பயணங்கள் குறித்தும் இருவரும் பேசியதாக தகவல் கூறுகின்றன.

திருச்சி வந்த விமானம்… கேட்பாரற்று கிடந்த ரூ. 41 லட்சம் மதிப்புள்ள பசை வடிவில் தங்கம் – போலீஸ் விசாரணை

சந்திப்புக்கு பின்னர், வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் விருந்தினர் புத்தகத்தில் பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறைச் செயலாளர் கையெழுத்திட்டார்.

இரண்டு வருடங்களுக்கு பின்னர் சிங்கப்பூர் வந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலாளரான, எனது நண்பர் தியோடோரோ எல்.லோக்சினை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.