போட்டோஷாப் எடிட் செய்து ART கிட் முடிவுகளில் பாசிட்டிவ்… “7 நாட்கள் வேலை விடுமுறை” – ஊழியர்களின் கோல்மால்!

public-should-not-hoard-art-kits moh

மலேசியாவில் ஊழியர்கள் கோவிட்-19 ART பரிசோதனை கருவிகளை மாற்றியமைத்து வேலைக்கு 7 நாட்கள் லீவு போட்டுவிட்டு சம்பளம் பெறுவதாக தி ஸ்டார் செய்தி கூறியுள்ளது.

இந்த தந்திரத்தை கைவிட்ட ஊழியர் மலேசிய ஊடகத்திடம் இதுபற்றி கூறுகையில்; “இது எளிதானது. படத்தை முழுமையாகச் சரிபார்க்காதவரை யாரும் அதை போலி என கண்டறிய முடியாது” என்றார்.

“வியாபாரம் பெரிசா ஒன்னும் இல்ல… இருந்தாலும் உழைத்து தான் சாப்பிடுவேன்” – 89 வயதிலும் உழைக்கும் Great ஊழியர்!

புகைப்படங்களை எடிட்டிங் செய்யும் மென்பொருளைப் பயன்படுத்தி இந்த சுய-பரிசோதனை கிட் முடிவு படங்களில் தந்திர வேலை பார்க்கப்படுகிறது.

இந்த போலியான கொரோனா சோதனை முடிவுகள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் பரவலாக பரவி வருகின்றன.

பரவலாக வரும் TikTok வீடியோக்களில், எலுமிச்சை சாறு ஊற்றி பாசிட்டிவ் ART சோதனை முடிவை பெறமுடிவதாகவும் பரப்பப்படுகின்றன.

ஆனால், சிங்கப்பூரில், இதுபோன்ற ART சோதனை முடிவில் ஏமாற்று வேலை செய்பவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பெண்ணை நாசம் செய்த பங்களாதேஷ் நாட்டவர்கள்: இன்று (மார்ச் 17) நீதிமன்றம் அளித்த உத்தரவு…!