சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெறும் – பிரதமர் லீ..!

PM Lee calls General Election 2020, says it will 'clear the decks' for a fresh mandate
PM Lee calls General Election 2020, says it will 'clear the decks' for a fresh mandate (Photo: The Straits Times)

சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தல், பாதுகாப்பான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெறும் என்று பிரதமர் லீ உறுதியளித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பாக அரசியல் பிரச்சாரம் மற்றும் வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதையும் உறுதிசெய்வதன் முக்கியவத்துவதை பற்றி பிரதமர் லீ கூறினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 119 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

இது இந்த COVID-19 தொற்று சூழலில் நடைபெற உள்ளதால், பொதுவாக நடைபெறும் வழக்கமான தேர்தலை போல இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாக்களிப்பு தினத்தன்று நடைமுறைப்படுத்தும். மேலும் இது இந்த COVID-19 தொற்று சூழலில் நடைபெற உள்ளதால், பொதுவாக நடைபெறும் வழக்கமான தேர்தலை போல இருக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகமான வாக்களிப்பு நிலையங்கள், பாதுகாப்பு இடைவெளி, வாக்குகளைச் செலுத்த குறிப்பிட்ட நேரம் ஆகியவை அந்த நடவடிக்கைகளில் அடங்கும். கூடுதலாக வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை எவ்வாறு செய்யலாம் என்பது பற்றிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக சிங்கப்பூரின் வழக்கமான பிரசாரக்கூட்டங்கள் நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம், தொலைக்காட்சி, இணையத்தளங்கள் மூலம் வாக்காளர்களிடம் பேசுவது ஆகியவற்றுக்குக் கூடுதல் வாய்ப்புகள் இருக்கும்.

COVID-19 பரவல் சூழலில் தேர்தலை நடத்தியுள்ள நாடுகள், தென் கொரியா, தைவான், சில ஐரோப்பிய நாடுகள் ஆகியவை பற்றி பிரதமர் லீ சுட்டிக் காட்டினார் என்று செய்தி மீடியாகார்ப் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பலத்த மழை காரணமாக சில பகுதிகளில் திடீர் வெள்ளம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg