ஜொகூர் மாநிலத்தின் மிக உயரிய விருதை பெறும் பிரதமர் லீ – சிங்கப்பூரின் “முதல் பிரதமர் லீ குவான் இயூ” வரிசையில் “பிரதமர் லீ”

Ministry of Communication & Information

பிரதமம் லீ சியென் லூங் மற்றும் அவரது மனைவி ஹோ சிங் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர்கள் இன்று மே 6, ஜோகூர் வரும்போது விருதுகளைப் பெறுவார்கள் என்றும் பிரதமர் அலுவலகம் (PMO) தெரிவித்துள்ளது.

சாலையில் சென்றுகொண்டிருந்த வேன்., திடீரென சுழன்று சாலை தடுப்பு, வெளிநாட்டு ஊழியர் ஏற்றிச்செல்லும் லாரியில் மோதி விபத்து

ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தரிடமிருந்து “ஆர்டர் ஆஃப் தி கிரவுன் ஆஃப் ஜோகூர்” (Order of the Crown of Johor) என்ற ஆக உயரிய விருதை திரு லீ பெறுவார் என கூறப்பட்டுள்ளது.

இந்த விருதானது ஜோகூர் மாநிலத்தின் மிக உயரிய கௌரவமாகும்.

இதற்கு முன்னர், சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ மற்றும் முன்னாள் பிரதமர் கோ சோக் தோங் ஆகியோருக்கு மட்டுமே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதே போல, திருமதி. ஹோ சிங்கிற்கு “ஆர்டர் ஆஃப் சுல்தான் இப்ராஹிம் ஆஃப் ஜோகூர்” (Order of Sultan Ibrahim of Johor) என்னும் விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதை பெறும் முதல் சிங்கப்பூர் என்ற பெருமையை திருமதி. ஹோவை சேரும்.

தேக்கா சென்டரில் சண்டை… இருவரை கைது செய்தது போலீஸ் – வீடியோ வைரல்