சிங்கப்பூரில் புதிய அமைச்சரவையை அறிவித்தார் பிரதமர் லீ..!

PM Lee Hsien Loong announces new Cabinet
PM Lee Hsien Loong announces new Cabinet (Photo: Ministry of Communications and Information)

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அவர்கள் தேர்தல் வெற்றிக்கு பின்னர் புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார்.

கூடுதலாக, அரசாங்கத்தின் இதர முக்கியப் பதவிகளுக்கான நியமனங்களையும் திரு. லீ அறிவித்தார். மொத்தத்தில், முந்தைய அமைச்சரவையைப் போலவே, புதிய அமைச்சரவையில் 37 அரசியல் அலுவலக அதிகாரிகள் இருப்பார்கள்.

இதையும் படிங்க : ஆட்குறைப்பை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் – NTUC..!

இதில் மக்கள் செயல் கட்சியைச் (PAP) சேர்ந்த 7 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.

பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மூத்த அமைச்சர், திரு தர்மன் சண்முகரத்னம் சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் தொடர்கிறார்.

மேலும் சட்ட, உள்துறை அமைச்சர் திரு. கா. சண்முகம், கடந்த அமைச்சரவையில் வகித்த பதவியை தொடர்ந்து வகிக்கின்றார்.

அதே போல், தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மற்றும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் ஆகியோரும் அதே பதவிகளைத் தொடர்ந்து வகிக்கின்றனர்.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அடுத்த மாதம் முதல் கொரோனா இருக்காது.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg