பாலி தீவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜி20 உச்சி மாநாட்டை இந்தோனேசியா தலைமையேற்று நடத்தவுள்ள நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ (His Excellency Joko Widodo, President of the Republic of Indonesia) நவம்பர் 14- ஆம் தேதி முதல் நவம்பர் நவம்பர் 16- ஆம் தேதி வரை பாலி தீவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்- க்கு அழைப்பு விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, ஜி20 உச்சி மாநாட்டில் சிங்கப்பூர் பிரதமர் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

பள்ளி மாணவிகள் மீது துப்பிய நபர்! – என்ன துப்பினார் தெரியுமா?;கண்டித்த நீதிபதி!

ஜி20 உச்சி மாநாட்டில் உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு, சுகாதாரம், டிஜிட்டல் மாற்றம் ஆகிய பிரிவுகளின் கீழ் உலக தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர். அத்துடன், “ஒன்றாக மீட்போம், வலுவாக மீட்போம்” (“Recover Together, Recover Stronger”) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் உள்ள சிக்கல்கள், பிரச்சனைகள் குறித்தும் உலக தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.

இந்த விவாதங்களில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பங்கேற்கிறார். அத்துடன், ஜி20 உச்சி மாநாட்டிற்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசவுள்ளார்.

சிங்கப்பூர் பிரதமருடன் துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் பாலி தீவுக்கு செல்கின்றனர்.

சலீம் என்ற போலியான பெயரில் பாஸ்போர்ட் வைத்திருந்த வீரமுத்து: சிங்கப்பூரில் இருந்து திருச்சி… சிறையில் அடைத்த போலீஸ்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், வெளிநாட்டில் இருக்கும் காலகட்டத்தில், மூத்த அமைச்சரும், தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹியன் (Teo Chee Hean, Senior Minister and Coordinating Minister for National Security), தற்காலிக பிரதமராக பொறுப்பு வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.